பவர்ஸ்டாருக்கு ஜோடியாக த்ரிஷா

50

டைட்டிலை படித்துவிட்டு த்ரிஷாவின் ரசிகர்கள் கோபத்தில் பல்லைக் கடிக்கவேண்டாம். மற்ற ரசிகர்களும் கூட த்ரிஷாவின் நிலை இப்படியா ஆகவேண்டும் என வருத்தப்படவும் வேண்டாம். எல்லாம் சுபச்செய்திதான். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட்டான ‘தூக்குடு’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில் கதாநாயகனாக நடிப்பவர் கன்னட உலகின் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் (இவரு அங்க ஆக்‌ஷன் ஹீரோங்க). இவருக்கு ஜோடியாக நடிபதற்குத்தான் த்ரிஷாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாகவும் தர தயாராக இருக்கிறார்களாம்.

அப்படி த்ரிஷா இந்தப்படத்தில் நடிக்கும் பட்சத்தில் கன்னடத்தில் அவரது முதல் படமாக இது இருக்கும். எற்கனவே தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் கால் பதித்துவிட்ட த்ரிஷா, கன்னடத்திலும் முக்கியமான இடத்தைக் கைப்பற்றாமலா போயிடுவார்?.

Leave A Reply

Your email address will not be published.