ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தான் இன்று சிட்டியின் ஹாட் டாபிக். சரி.. டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் என்பதால் யாராவது ரசிகர்களின் வேலையாக இருக்கும் என்று நினைத்தால் தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருவதுதான் ஆச்சர்யம்.
ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்திற்கான புரமோஷன் போஸ்டர்தான் என விசாரித்ததில் தெரிய வந்தது.
எதற்காக இப்படி ஒரு விளம்பரம் என பட்த்தின் இயக்குனர் கலாஸியிடம் கேட்டால், “இந்த போஸ்டரில் உள்ள பிரபலங்களுக்கு நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயதிற்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதை சூசகமாக சொல்லத்தான் இப்படி ஒரு போஸ்டரை உருவாக்கினோம்” என்கிறார். எப்படியெல்லாம் பப்ளிசிட்டி பண்றாங்க பாருங்க.