2005 ஆம் வருடம் ஒரு பத்திரிக்கையில் தன்னுடைய புகைப்படத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக வெளியிட்டதாக சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மீது த்ரிஷாவும் அவரது அம்மாவும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
ஆனால் தற்போது த்ரிஷா அந்த வழக்கை தான் வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கூடவே அந்த போட்டோவில் இருப்பது, தான் இல்லை என்ற நிலைப்பாட்டிலும் உறுதியாக இருக்கிறார். இருந்தாலும் ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் த்ரிஷா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் த்ரிஷா மீது அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்திருக்கிறாராம் நீதிபதி.