தனுஷ்-காஜல் அகர்வால் படத்தை இயக்குகிறார் பாலாஜி மோகன்

192

இரண்டாவது படத்தில் மலையாள மெகாஸ்டாரின் மகனை இயக்கும் வாய்ப்பை பெற்ற பாலாஜிமோகனுக்கு மூன்றாவது படத்தில் இந்திய சூப்பர்ஸ்டாரின் மருமகனை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை ஜாக்பாட் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி சொல்வதாம்..?

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்த இயக்குநர் பாலாஜி மோகன், இப்போது ‘வாய் மூடி பேசவும்’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கியுள்ளார். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

இப்போது ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட பாலாஜி மோகன் அதன் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். இதை முடித்துவிட்டு அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தனுஷ் தற்போது நடித்துவரும் படங்களை முடித்ததும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஏற்கனவே ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுடன் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை இழந்த காஜல் இப்போது தனுஷுடன் இந்தப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

1 Comment
  1. 93181 437774Black Ops Zombies is now available […]Take a appear here[…] 805795

Leave A Reply

Your email address will not be published.