பல பிரமாண்ட வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் தான் ஆஸ்கார் பிலிம்ஸ். தற்போது ஜெய், நஸ்ரியா நடிப்பில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது இந்நிறுவனம். இந்தப்படத்தை புதுமுகம் அனீஸ் என்பவர் இயக்குகிறார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை think music நிறுவனத்தினர் மிகுந்த போட்டிக்கு இடையே வாங்கி உள்ளனர். இந்தப்படத்தின் ஆடியோ நாளை காலை 8 மணிக்கு ரேடியோ மிர்ச்சி எஃப்.எம்மில் எளிமையாக வெளியிடப்படுகிறது.
இந்த படத்தின் இசை பற்றி சிலாகித்து பேசும் இயக்குனர் அனீஸ், “இந்தப்படத்தின் மயிலிறகு போல் வருடும் மெல்லிய இசையும் அதனுடன் இணைந்து வரும் இதுவரை கேட்டிராத புதிய இசை அனுபவமும் படத்தின் பாடல்களுக்கு மட்டுமல்ல படத்தின் வெற்றிக்கும் உரமாக இருக்கும்” என்கிறார்.