பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி. சுரேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் தான் ‘கோலாகலம்’. பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா ட்ராவல்ஸ் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்த பரணி ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று மாலை நடைபெற இருக்கிறது.
நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்த சரண்யா மோகன், இப்போது, தான் நினைத்தமாதிரியே இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஹீரோவாக புதுமுகம் அமல் என்பவர் நடிக்கிறார். மேலும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா மற்றும் பலரும் இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.