கொஞ்சம் உஷாராகத்தான் இருக்கிறார்கள் ஜில்லா யூனிட்டில். வழக்கமாக ஒரு படத்தின் ட்ரெய்லரை படம் வெளியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியிடுவதுதான் வழக்கம். குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளியாவது இருக்கும். சிலபேர் இரண்டு விதமான ட்ரெய்லர்களை வெளியிட்டு பட ரிலீஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே டெம்போவை கூட்டுவார்கள்.
ஆனால் இதற்கு நேர்மாறாக ‘ஜில்லா’ படத்தின் ட்ரெய்லர் இன்றுதான் வெளியிடப்படுகிறது. படம் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அதாவது 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ட்ரெய்லர் வெளியீடு என்பதே படம் வரும் வரை படத்தின் கதை அப்படி இருக்கும்.. இப்படி இருக்கும் என ரசிகர்களிடையே யூகங்களை கிளப்பிவிட்டு ரிலீஸ் தேதிவரை அவர்களை பரபரப்புடன் வைத்திருப்பதற்குத்தானே..?
விஜய்யும் அப்படித்தான் இருந்தார். ஆனால் ‘தலைவா’ படத்தின் ட்ரெய்லர் வெளியான பின்னர், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும் வசனங்களும் படத்தின் ரிலீஸுக்கே ஆப்பு வைக்கப்போகின்றன என்பதை விஜய் உட்பட அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. அதன்பின் நிகழ்ந்த சோகம் தான் நமக்கு தெரியுமே..
அதனால் இந்தமுறை அப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கு இடம் எதுவும் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ‘ஜில்லா’ ஆடியோ ரிலீஸின்போதும் ஆர்ப்பாட்டம் ஏதும் காட்டவில்லை. இதோ.. இப்போது ட்ரெய்லரையும் இரண்டு நாட்கள் முன்னாடி இன்றுதான் ரிலீஸ் செய்கிறார்கள். ஒன்றுமட்டும் நிச்சயம்.. இது திரையுலகின் வசந்த காலமல்ல.. கசந்த காலம் என்றுதான் சொல்லவேண்டும்.