‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ என டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கியது நான்கு படங்கள் தான்.. இப்போது ஐந்தாவதாக அவர் இயக்கும் படம் தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், பிரியா ஆனந்த் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் முதற்கட்டமாக நடைபெற இருக்கிறது.
இந்தப்படத்தில் வழக்கமான சில விஷயங்களில் சில மாற்றங்களை செய்திருக்கிறார் கண்ணன். அவர் இயக்கும் படங்களில் கட்டாயம் சந்தானம் இருப்பார். ஆனால் இந்தப்படத்தில் சந்தானம் இல்லை. அவருக்கு பதிலாக அந்த இடத்தை தற்போது நிரப்பி இருப்பவர் சூரி.
அதேபோல் தான் இயக்கிய நான்கு படங்களில் இரண்டில் வித்யாசகர், இரண்டில் தமன் என இசைக்கூட்டணி அமைத்த கண்ணன், தற்போது கைகோர்த்திருப்பது டி.இமானுடன். இந்தப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.