‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என வைரமுத்துவை தன் படத்திற்கு பாட்டு எழுதவைத்து அந்த பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுத்தந்தவர் இயக்குனர் சீனுராமசாமி.. நேற்று நடைபெற்ற ‘தொப்பி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சீனுராமசாமி ஒரு பாட்டு ஹிட்டானதை தெரிந்துகொள்வது எப்படி என்கிற சூட்சுமத்தை விளக்கினார்..
“நாம ஆடியோ ரிலீஸ் பண்ணிருப்போம்.. இந்தப்பாட்டு நல்லா இருக்கேன்னு நாம ஒரு பாட்டையாவது நினைச்சிருப்போம்… யாராவது போன் பண்ணி நல்லாருக்கான்னு சொல்லமாட்டாங்களான்னு நினைப்போம்.. ஆனா நம்ம கூட பழகுற சமகால இயக்குனர்கள் யார்கிட்ட இருந்தும் உங்களுக்கு ரெண்டு நாளைக்கு போன் வரலைன்னா, பாட்டு ஹிட்டுன்னு நீங்க புரிஞ்சுக்கலாம்.. காரணம் மத்தவங்களோட பாடலோ, படமோ அது ஹிட்டானா உடனே ஒப்புக்கிற மனசு அவங்ககிட்ட இல்ல.. இது என் அனுபவத்துல இருந்து நான் தெரிஞ்சுக்கிட்டது..” என்றார் சீனுராமசாமி..
Comments are closed.