ஒன்றா..? பத்தா..? எத்தனை முறை முத்தம் கொடுக்க விருப்பம்..?

235

 

சின்ன பட்ஜெட் படமாக உருவாகியிருந்தாலும் சில மாதங்களுக்கு முன் வெளியான சண்டியர் படம் பாரவையாளர்களை மிகவும் கவர்ந்தது.. குறிப்பாக அதில் கதாநாயகியாக நடித்திருந்த ரக்சா ராஜின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். தற்போது யுரேகா இயக்கத்தில் தொப்பி’ என்கிற படத்தில் நடித்துள்ளார் ரக்சா.

இந்தப்படத்தில் கதாநாயகன் முரளியுடன் லிப் கிஸ் சீனில் நடித்திருக்கிறார் ரக்சா. நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது திரையிட்டு கட்டாப்பட பாடல் காட்சி ஒன்றில் இதை பார்த்த சிறப்பு விருந்தினர்கள், அவரின் தைரியத்தை பாராட்டினார்கள்.

விழாவில் பேசிய ரக்சா, “இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் என்னிடம் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த முத்தக்காட்சியை படமாக்கும்போது, ஒரே டேக்கில் சரியாக செய்துவிட்டால், ஒரே முத்தத்துடன் வேலை முடிந்துவிடும்.. பத்து டேக் சொதப்பினால், பத்து முத்தம் தரவேண்டியிருக்கும்.. ஒன்றா? பத்தா? என்பதை நீ முடிவு செய்துகொள் என முன்கூட்டியே கூறிவிட்டார். அதனால் ஒரே டேக்கில் அதை ஓகே செய்தேன்” என கூறினார்

Comments are closed.