‘ஜன்னல் ஓரம்’ படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்து ரசிகர்களின் புருவங்களை உயரவைத்ததுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் விதார்த். பொங்கலுக்கு வெளியாகும் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் விதார்த். இந்த நிலையில் அவர் நடித்துள்ள ‘வெண்மேகம்’ என்ற படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப்படத்தில் விதார்த்தும் ‘நண்டு’ ஜெகனும் ஓவியர்களாக நடிக்கிறார்கள். விதார்த்துக்கு ஜோடியாக பிரபல மாடலான இஷாரா நடிக்கிறார். விதார்த்தின் வீட்டின் அருகில் வசிக்கும் பள்ளி மாணவியான ஜெயஸ்ரீ சிவதாஸ் அவருடன் நெருங்கிப்பழக, அதைக் கண்டிக்கிறார் சிறுமியின் தாயாரான ரோகிணி.
இதனால் மனதளவில் பாதிக்கப்படும் விதார்த், தனது காதலியின் துணையுடன் எப்படி அதிலிருந்து மீள்கிறார் என்பதுதான் ‘வெண்மேகம்’ படத்தின் கதை. இந்தப்படத்தை சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் தயாரிக்க, ராம்லட்சுமண் எனபவர் இயக்கியுள்ளார்.