வேறு வழியில்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அதை கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து அஜித் மட்டும் தப்பமுடியுமா என்ன? ஓப்பனிங் சாங் வைப்பது பற்றித்தான் சொல்கிறோம். சரி… வழக்கம்போல இல்லாமல் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் அறிமுகப்பாடலில் என்ன புதுமை பண்ணலாம் என யோசித்தார் ‘சிறுத்தை’ சிவா.
டான்ஸ்மாஸ்டர் ப்ரேம் ரக்ஷித்தையும் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வத்தையும் அழைத்து சின்னதாக ஒரு டிஸ்கஷன் நடத்தினார். சூப்பரான ஓப்பனிங் சிச்சுவேசன் ரெடியானது. அறிமுகப்பாட்டிலேயே டான்ஸையும் எதிரிகளை புரட்டியெடுக்கும் ஃபைட்டையும் சேர்த்து மிக்ஸ் பண்ணிவிட்டார் சிவா.
இந்தப்பாட்டிலேயே அஜித்தின் சகோதரர்களாக நடிக்கும் விதார்த், பாலா, சுஹைல், முனிஷ் ஆகியோரின் அறிமுகப்பாடலமும் இருக்கிறதாம். மேலும் மற்ற படங்களில் வருவதுபோல பின்னணியில் பாடல் ஒலிக்க அதில் நடக்கும் சண்டைக்காட்சிகள் போல இல்லாமல் இது வேறு மாதிரி இருக்குமாம். ஏற்கனவே ‘போக்கிரி’ படத்தில் விஜய் இதேபோல ‘ஆடுங்கடா என்னச் சுத்தி’ன்னு ரௌடிகளை பந்தாடிக்கிட்டே ஆட்டம் போட்டிருப்பார். இதுல என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.