சிங்கம்-2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் எல்லாம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார். அனேகமாக இந்தப்படத்தில் ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஹரி ஏற்கனவே 2007ல் விஷாலை வைத்து ‘தாமிரபரணி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியுள்ளார். ‘சிங்கம்-2’ தந்த வெற்றியில் இருக்கும் ஹரியும் ‘பாண்டியநாடு’ தந்த வெற்றியில் இருக்கும் விஷாலும் இணைந்தால் அது இன்னொரு மெகா ஹிட்டாகத்தான் இருக்கும்.