பாலாவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஆர்.கண்ணன் என்பவர் இயக்கிவரும் ‘நான்தான் பாலா’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் விவேக். குறிப்பாக இந்தப்படத்தில் தனது வழக்கமான காமெடி நடிப்பிலிருந்து விலகி முதன்முதலாக சீரியஸான ரோலில் நடித்து வருகிறார் விவேக்.
இந்தப்படம் ஒரு பிராமணருக்கும் ஒரு முரடனுக்கும் உள்ள உறவைப்பற்றிய கதையாம். இதில் பிரமாணர் கேரக்டரில் தான் நடிக்கிறார் விவேக். முதலில் இந்த கேரக்டர் தனக்கு செட் ஆகாது என இந்தப்படத்தில் நடிக்க அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம் விவேக்.
ஆனால் “இந்த வாய்ப்பை விடவேண்டாம். இதுவரை உங்களை காமெடி நடிகராகவே பார்த்திருந்தாலும், புதிய பரிமாணத்தில் ரசிகர்கள் உங்களை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு பல முன்னுதாரணங்களும் உண்டு” என விவேக்கிற்கு நம்பிக்கை ஊட்டியவர் கமல் தான். “சீரியஸாக நடிப்பது ஒன்றும் எளிதான விஷயமல்ல என்பதை புரிந்துகொண்டேன்” என்கிற விவேக், இப்போது முழு மனதுடன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து வருகிறார்.