ஒரு அரசியல் தலைவரின் மகனாக இருந்தாலும் தன்னை எந்த இடத்திலும் ஒரு அரசியல்வாதியாக முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர் உதயநிதி ஸ்டாலின். தன் தாத்தாவின் அடியொற்றி சினிமா தான் தனது எதிர்காலம் என தீர்மானித்த உதயநிதி ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறி தமிழ்சினிமாவுடன் தன்னை இணைத்துக்கொண்டார்.
நல்ல கதைகள் கிடைத்தால் ஹீரோவாக நடிக்கலாம் என்று நினைத்தவருக்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சரியான மேடை போட்டுக் கொடுத்தது. அதைப் பின்பற்றி தற்போது எஸ்.ஆர்.பிரபாகரனின் டைரக்ஷனில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.
எளிமையும் மென்மையான குணமும் கொண்ட உதயநிதிக்கு தமிழ்சினிமாவில் நல்லதொரு இடம் காத்திருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் உதயநிதிக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.