தான் நடித்துவரும் ஜில்லா படத்தின்மீது மிகுந்த ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் விஜய். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக ஜப்பானில் உள்ள ஒசாகாவிற்கு சென்றது ‘ஜில்லா’ படப்பிடிப்புக்குழு. காரணம் படத்தின் இயக்குனர் நேசனையும் விஜய்யையும் அங்குள்ள லொக்கேஷன்கள் ரொம்பவும் கவர்ந்து விட்டதுதான்.
ஒசாகாவில் உள்ள பழமை வாய்ந்த இடங்களும் அதன் பாரம்பரியமும் அப்படியே தங்களது படத்தில் காட்சிப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும் என இருவருமே விரும்பினார்கள். அங்கே ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்குவது தொடர்பான வேலைகளை விஜய்தான் முன்னின்று முடித்துக்கொடுத்தாராம்.
ஆனால் அங்கே போயிருந்த நேரத்தில் அங்கு ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் தொடர்மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த, திட்டமிட்டதற்கும் மேலே கொஞ்சம் அதிக நாட்கள் ஆகிவிட்டது. இதனால் பட்ஜெட்டையும் தாண்டி செலவானது. இருந்தாலும் தயாரிப்பாளரின் மீது அந்த அதிகப்படியான செலவை திணிக்க விரும்பாத விஜய், தானே அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ‘தலைவா’ படம் தந்த சரிவை ‘ஜில்லா’ மூலம் நிமிர்த்த தனது முழு உழைப்பையும் இந்தப்படத்தில் கொட்டியிருக்கிறார் விஜய்.