சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தை இயக்கிய விஷ்ணு சிவன், தற்போது கௌதம் கார்த்திக்கை வைத்து ‘நானும் ரௌடி தான்’ என்ற புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார். கௌதமுக்கு ஜோடியாக நடிப்பவர் முன்னாள் மிஸ்.உத்தரகாண்ட்டான லாவண்யா திரிபாதி.
கடந்த 2012ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘அந்தால ராட்சஷி’ படத்தில் அறிமுகமான இவர்தான் தற்போது ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். ‘நானும் ரௌடிதான்’ படத்தில் காதுகேளாத பெண்ணாக நடிக்கிறார் லாவண்யா.
இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி-14ல் துவங்குகிறது.