‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் மாளவிகா வேல்ஸ். இந்தப்படத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியையாக நடித்திருக்கிறார் மாளவிகா. மலையாளத்தில் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலமாக அறிமுகமான இவர் தற்போது மீண்டும் மலையாளத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக ‘கப்ப படம்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பிராமணப் பெண்ணாக நடிக்கிறார் மாளவிகா. மேலும் தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்பும் மாளவிகா ஒரு அற்புதமான க்ளாசிக் டான்ஸரும் கூட. பரதம், குச்சுப்புடி, மோகினியாட்டம் என அனைத்து விதமான நடனங்களும் இவருக்கு அத்துப்படி என்பதால் தனது நடனத்திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர் என்றால் உடனே கால்ஷீட் கொடுப்பேன் என்கிறார்.