“ப்ப்ப்பா.. யார்டா இது பேய் மாதிரி இருக்கு” என்று யாரைப்பார்த்துச் சொன்னாரோ அவருடன் தான் மூன்றாவதாகவும் ஜோடி சேர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தன்மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துவிட்டதால் புதிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாகவே இருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால் படத்தின் கதாநாயகி மட்டும் அவர் தேர்ந்தெடுக்காமலேயே எதிர்பாராத விதமாகத்தான் அமைகிறது.
ஆனால் அறிந்தோ அறியாமலோ அவருடன் மூன்றாவதாகவும் ஜோடி சேர்ந்திருக்கிறார் காயத்ரி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அதே காயத்ரி தான். அவரது நடிப்பில் அடுத்ததாக ரிலீஸுகு தயாராக இருக்கும் படம் தான் ‘ரம்மி’. இந்தப்படத்தில் ஹீரோயினாக காயத்ரி நடித்திருக்கிறார்.
இப்போது அடுத்ததாக ‘மெல்லிசை’ என்ற படத்திலும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் காயத்ரி. இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே கிசுகிசுக்கள் புகைய ஆரம்பித்துவிடும். மூன்றாவது படத்திலும் ஜோடி என்றால்.. ம்ம். கிசுகிசு வராமல் இருந்தால் சரிதான்.