நெருங்கியவர்களின் விருந்துகளை புறக்கணித்த பாலிவுட் பிரபலங்கள்

108

இது பிரபலங்கள் தரும் பார்ட்டிகளில் அவர்களுக்கு நெருங்கியவர்கள் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் சீசன் போலத்தான் தெரிகிறது. இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு சல்மான்கான் தனது தம்பி சோஹைல்கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதில் அவரது தம்பி இயக்கும் ‘ஜெய்ஹோ’ படத்தில் ஹீரோவாக வேறு நடித்து வருகிறார் சல்மான்கான்.

இந்தச்செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தீபிகா படுகோன் அளித்த விருந்தில் அவரது மிக நெருங்கிய நண்பரான ரன்பீர் கபூர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அன்றைய தினம் அவருக்கு வேறு எந்த நிகழ்ச்சியோ அல்லது படப்பிடிப்போ இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இவர்கள் இருவருக்குமான நெருக்கம் நாடறிந்த விஷயம். இருவரும் காதலர்கள் என்று அறிவித்துக்கொள்ளாத குறை மட்டும்தான்.

இந்தப் புறக்கணிப்பிற்கான காரணம் என்ன என ஆராய்ந்தால். ரன்பீரிடம் தற்போது நெருக்கம் காட்டிவரும் அவரது புதிய தோழியான காத்ரினா கைஃப்பை இந்த விழாவிற்கு தீபிகா அழைக்காததால் அதை ஒரு மனக்குறையாக எடுத்துக்கொண்ட ரன்பீர் தானும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. ரன்பீரின் இந்த செயலால் காத்ரீனாவின் தொழில்முறை எதிரியான தீபிகா வருத்தத்தில் இருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.