ஹாலிவுட்டுக்கு போகிறார் ஹன்சிகா

106

‘அரண்மனை’, ‘மான் கராத்தே’ மற்றும் ‘கோல்மால்-3’ படத்தின் ரீமேக் ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்துவிட்ட ஹன்சிகா இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா. அமெரிக்காவில். ஆம்.. தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் ஃப்ரீயாக இருக்கும் ஹன்சிகா விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

ஹன்சிகாவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஹன்சிகா அமெரிக்காவில் உள்ள தனது தோழிகளுடன் விடுமுறையை சந்தோஷமாக கழித்து வருகிறார். அனைவரும் ஹன்சிகாவுடன் நர்ஸரி பள்ளியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள். எவ்வளவு பிஸி ஷெட்யூலாக இருந்தாலும் ஓவ்வொரு வருடமும் அங்கே இருக்கும் தன் தோழிகளை சந்திப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறார் ஹன்சிகா” என்கிறார்கள்.

தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கி இருக்கும் ஹன்சிகா இன்னும் இரண்டு நாட்களில் அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறார். அங்கே ஒருவாரம், தான் தங்குவதற்காக தனியாக ஒரு அபார்ட்மெண்ட்டில் வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். இதுவும் தவிர லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கி இருக்கும் நாட்களில் ஹாலிவுட்டையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வர முடிவுசெய்துள்ளாராம் ஹன்சிகா.

Leave A Reply

Your email address will not be published.