தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘தட்டத்தின் மறயத்து’..!

93


மலையாள சினிமாவை பொறுத்தவரை தமிழ்ப்படங்களை நேரடி ரிலீஸாகவே அவர்கள் ஊரில் பார்த்துவிடுவார்கள். ஆனால் தெலுங்கு படங்களில் ஹிட் ஆனவற்றை மட்டும் டப்பிங் செய்து திரையிட்டுக் கொள்வார்கள். ஆனால் தெலுங்கிலோ மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான படங்களை ரீமேக் செய்யவும் தவறுவது இல்லை.

அந்தவகையில் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற படமான ‘தட்டத்தின் மறயத்து’ தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மலையாள இயக்குனர் சீனிவாசனின் மகன் வினீத் சீனிவாசன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். மலையாளத்தில் இளைஞர்களை கிறங்கடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப்படத்தில் நிவின் பாலி, இஷா தல்வார்(தில்லுமுல்லு ஹீரோயின்) ஜோடியாக நடித்திருந்தனர்.

Related Posts

இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் தெலுங்கில் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார் சசிகிரண் நாராயணா. இவர் பிரபல தெலுங்கு காமெடி, குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.நாராயணாவின் மகள். இந்தப்படத்தில் புதுமுகங்கள் திலீப், பிரியால் கௌர் இருவரும் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.

மலையாளத்தில் இந்தப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஷான் ரகுமானின் இசையில் ஹிட்டான பாடல்களும் முக்கிய காரணம். இவரே தற்போது தெலுங்கிலும் இசையமைக்கிறார். அதுமட்டுமல்ல, மலையாளத்தில் இந்தப்படத்திற்காக ‘முத்துச்சிப்பி’ என்ற சூப்பர்ஹிட் பாடலை பாடிய ரம்யா நம்பீசன் இதிலும் ஒரு பாடலை பாட இருக்கிறார்.

Comments are closed.