மே தினத்தில் கோச்சடையான் ரிலீஸ் – அசோக் அமிர்தராஜ் வாழ்த்து

99


புகழ்பெற்ற டென்னிஸ் வீர்ர் என்பதையும் தாண்டி ஹாலிவுட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர் என்ற பெருமை அசோக் அமிர்தராஜுக்கு உண்டு. மேலும் ரஜினி நடித்த ஒரே ஹாலிவுட் படமான ‘ப்ளட்ஸ்டோன்’ படத்தை தயாரித்தவரும் இவர்தான்.

தற்போது ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் ட்ரெய்லர் மற்றும் மேக்கிங் காட்சிகளை பார்த்து வியந்த அசோக் அமிர்தராஜ் மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் ‘கோச்சடையான்’ படம் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.

மேலும் ரஜினிக்கும் படத்தை இயக்கிய சௌந்தர்யா மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. முதலில் ஏப்-11ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘கோச்சடையான்’ தற்போது மே தினமான மே-1ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது,

Comments are closed.