
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடித்துள்ள ‘யட்சன்’ படம் வரும் செப்டம்பர்-11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றுதான் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு தினம்.. ஆனால் இது ஏதேச்சையாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும்..
முதலில் ஆகஸ்ட்-28ல் தான் படத்தை ரிலீஸ் செய்வதாக பிளான் வைத்திருந்தனர்.. ஆனால் அதே தினத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி நடித்துள்ள ‘தனி ஒருவன்’ படம் வெளியாவதால், தற்போது இரண்டு வாரங்கள் கழித்து செப்-11க்கு ‘யட்சன்’ ரிலீஸை மாற்றிவைத்துவிட்டனர்.
Comments are closed.