‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாராவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? விக்ரமிற்கு அடுத்ததாக மொத்த படத்தையும் தூக்கி சுமந்தது அவர்தானே.. அதனால்தானோ என்னவோ சாராவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து ‘சைவம்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார் ஏ.எல்.விஜய்.
விஜய்யை வைத்து ‘தலைவா’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கும்போதே தனது அடுத்தபடமாக ‘சைவம்’ தான் இருக்கும் என்று சொல்லிவந்த ஏ.எல்.விஜய், இந்தப்படத்தின் மூலம் விருதுகளை அள்ளுவார் என தெரிகிறது. சொல்லப்போனால் ‘தலைவா’ தந்த காயங்களுக்கு இந்த ‘சைவம்’ மருந்து பூசும் என்று நம்புவோம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.