மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் இளைஞர்கள் நெஞ்சை கொள்ளையடித்த சாய்பல்லவி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தமிழில் முதன்முதலாக நடித்துள்ள படம் ‘கரு’. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் கதை ஒரு பெண்ணை மையப்படுத்தியது என்பதால், இந்தப்படத்தை தொடர்ந்து தனக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் சாய்பல்லவி. வரும் பிப்-9ஆம் தேதி இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுவதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது

Comments are closed.