பிரியாமணிக்கு தமிழ்சினிமாவில் தான் படவாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கிலும் இந்தியிலும் ஏதாவது ஒரு படத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘சண்டி’ என்ற தெலுங்கு படத்தின் ஹீரோயினே ப்ரியாமணி தான். இந்தப்படம் தமிழில் ‘அஞ்சாத சண்டி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் பல வெற்றிப்படங்களை இயக்கிய சமுத்திரம் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
பிரியாமணி இந்தப்படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்கு எல்லாவிதமான சண்டைகளையும் கற்றுத்தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் பயிற்சியாளராக முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடிக்கிறார். ‘காஞ்சனா’, ‘சென்னையில் ஒரு நாள்’ படங்களுக்கு பிறகு சரத்குமாருக்கு இந்தப்படம் மற்றுமொரு திருப்புமுனையாக அமையும் என்கிறார் இயக்குனர் சமுத்திரம்.
சண்டைக்காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக பிரியாமணியும் மிகுந்த பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.