’வெண்நிலா வீடு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சீமான், ”16 வயதினிலே படத்தில் சினிமாவை எளிதாக்கி கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. எங்களை நோக்கி நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ‘தமிழ்..தமிழ்’னு சொல்றீங்க கதாநாயகிக்கு மட்டும் மும்பைக்கு போறீங்களேனு கேட்குறாங்க ஆனால் அந்த குறையை தீர்த்து வைத்தவர் விஜயலட்சுமி. நல்ல தமிழ் பொண்ணுங்க இருக்காங்க. ஆனால் யாரும் நடிக்க வர்றதில்லை. அதே போல் இங்கே வந்திருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களிடம் பல மேடைகளில் நீங்கள் திரைப்படத்துறைக்கு பாடல் எழுத வர வேண்டும் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் வருவார்கள் என்று நம்புகிறேன்.” என்றார் சீமான்.