மகேஷ்பாபு, ஆமிர்கானுக்கு சூர்யா சவால்..!

74

சவால் விடுவதால் சமூகத்திற்கு பயன் தரும் விஷயங்களை செய்து வருகிறார்கள் சில நடிகர்கள். ஐஸ் பக்கெட் சேலஞ்சை இயற்கை வளத்தை காக்கும் மை ட்ரீ சேலஞ்சாக மாற்றிய மம்முட்டி, மரககன்றுகளை நட்டுவைத்து அசத்தினார். அதோடு நில்லாமல் விஜய், சூர்யா, ஷாருக்கான் ஆகியோருக்கும் சவால் விடுத்தார்.

சவால் விட்டது நடிகர்கள் எல்லாம் மதிக்கக்கூடிய மெகாஸ்டார் அல்லவா.? அதனால் மம்முட்டியின் சவாலை ஏற்றுக்கொண்ட விஜய்யும் சூர்யாவும் மரக்கன்றுகளை நட்டு சவாலை நிறைவேற்றியுள்ளார்கள். இதில் விஜய் யாருக்கும் சவால் விடவில்லை என்றாலும் சூர்யா தன பங்கிற்கு தென்னமரக்கன்றை நட்டுவைத்ததோடு மகேஷ்பாபு, சுதீப் மற்றும் ஆமிர்கானுக்கு சவால் விடுத்துள்ளார். நல்லது நடக்கும் என்றால் சவால் விடுவது நல்லது தான்…

Comments are closed.