நிவின்பாலி பட ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சூர்யா-ஜோதிகா சர்ப்ரைஸ் விசிட்..!

89

surya - jyothika visit

36 வயதினிலே’ படம மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்சை வெற்றிகரமாக துவங்கினார் ஜோதிகா. இதற்கு அற்புதமான ஸ்கிரிப்ட்டுடன் ஜோதிகாவுக்கு கைகொடுத்தவர் மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. இவர் தற்போது மலையாளத்தில் நிவின்பாலியை வைத்து ‘காயங்குளம் கொச்சுண்ணி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கும் இந்தப்படம் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது உருவாகி வருகிறது..

இந்தப்படத்தின் முக்கிய காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட இருக்கின்றன. அதனால் தற்போது மற்ற காட்சிகளை மங்கலூருவில் படமாக்கி வருகிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. நிவின்பாலி உள்ளிட்ட படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தும் விதமாக இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சூர்யாவும் ஜோதிகாவும் திடீர் விசிட் அடித்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சூர்யா-ஜோதிகா இருவரையும் வரவேற்றார். படப்பிடிப்பு தளத்தில் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டிருந்த கேக்கை சூர்யா-ஜோதிகா இணைந்து வெட்டினார்கள்.. அதை தொடர்ந்து அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்கள்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் மீது கொண்டுள்ள நட்பு மற்றும் மரியாதை காரணமாகவே சூர்யாவும் ஜோதிகாவும் அவரது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்பதை சொல்லியா தெரியவேண்டும்..?

Comments are closed.