“குழந்தைகளுக்கு தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொடுங்கள்” ; கார்த்தி வேண்டுகோள்..!

93

theeran karthi

கடந்த வாரம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. சதுரங்க வேட்டை படத்தி தொடர்ந்து இந்தப்படத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத்.. இந்தப்படத்தின் படக்குழுவினர் நன்றி சொல்லும் சந்திப்பை பத்திறிகையாளர்கள் முன் நடத்தினர்.. அதில் கார்த்தி பேசியதாவது,

ராஜஸ்தானில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடத்தும் போது உணவு பிரச்சனை ஏற்படும் என்பதால், தயாரிப்பாளர் மொத்த படக்குழுவையும் விமானம் மூலம் அழைத்து சென்று தமிழ் நாட்டு உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். இயக்குநர் வினோத் படபிடிப்பை பற்றி அதிக திட்டங்களை வைத்து இருந்தார் ஆனால் பல பிரச்சனைகள் இருந்தது.

ஏனென்றால் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தலைவர் இருந்தார்கள் அவர்களிடம் அனுமதி பெறுவதே பெரும்பாடாக இருந்தது. இதனால் இயக்குநர் நினைத்த விஷயம் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் வருத்தப்பட்டார். ஒரு படம் எடுப்பதே அப்படி தான் இருக்கிறது நாம் பெரிய கனவுகளோடு செல்கிறோம் அதை எடுத்து முடிப்பது இறைவன் செயலாக இருக்கிறது.

கதையை திரையில் கொண்டு வருவது என்பது மிக முக்கியமான ஒன்று பொருளாதார ரீதியாகவும் நடு நிலையாக இருந்து ஆர்ட் டைரக்டர் கதிர் பார்த்துகிட்டார். இனி அனைத்து காவல்துறை சம்பந்தபட்ட படங்களில் இனி அவர் கண்டிப்பாக இருப்பார் என்று தோன்றுகிறது.

வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ச்சியாக படங்கள் பண்ண முடியும். தோல்விகளையும், அவமானங்ககளையும் தாண்டி வரும் போது தான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். ஒரு செயலில் தோல்வி அடைந்தால் குழந்தைகள் சோர்ந்து போகின்றனர். தோல்வி வாழ்வின் ஒரு அங்கம் அதை நீங்கள் சந்தித்தே தீரவேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஒரு செயலில் உறுதியாக இருப்பார்கள். வளர வேண்டும் என்றால் தோல்விகளை தாண்டி தான் வரவேண்டும் என்று பெற்றவர்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். தேர்வு சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது திணிக்கும் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

சில பெற்றோர்கள் பொறுமை இழந்து குழந்தைகளை அடிகிறார்கள் குழந்தைகளை அடிக்க வேண்டாம். சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்குங்கள்” என பெற்றோர்களுக்கு தனது கோரிக்கையை வைத்து பேச்சை முடித்தார் கார்த்தி.

Comments are closed.