சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் படம் ஓடுகிறதோ இல்லையோ, அந்தப்படத்தின் ஹீரோவை ரசிகர்கள் தொடர்ந்து ரசிக்கிறார்கள் என்றால் அது பெரிய வரம்.. எல்லோருக்கும் அது கிடைத்துவிடாது.. ஆனால் அப்படி ஒரு முகத்துக்கு சொந்தக்காரர் தான் உதயநிதி.
எடுத்த எடுப்பிலேயே நானும் ஹீரோ தான் என டாப் கியரை தூக்காமல் திரைப்பட வினியோகம், தயாரிப்பு என சினிமாவின் சூட்சுமங்களை ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதே சினிமாவின் மீதான அவரது நேசிப்பு தெரிய ஆரம்பித்தது.
தனக்கு எது செட் ஆகுமோ அதிலிருந்து ஒரு இஞ்ச் கூட மீறாமல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் உதயநிதி அதுதான் அவரது பலமும் கூட. சமீபத்தில் வெளியான ‘இப்படை வெல்லும்’ உதயநிதிக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
இன்று பிறந்தநாள் காணும் உதயநிதிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.