இந்தியில் ‘பா’, ‘சீனிகம்’ என வித்தியாசமான படங்களை டைரக்ட் பண்ணி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. குறிப்பாக ‘பா’ படத்தில் வினோத நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தையை ஒரு மகனாக நினைத்து பாதுகாக்கின்ற ஒரு மகனுடைய கதையை படமாக்கியிருந்தார். இந்த படத்தில் நடித்த அமிதாப் பச்சன்.. சும்மா சொல்லக்கூடாது.. மிரட்டியிருந்தார்.
தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு அமிதாப் பச்சன், நடிப்பில் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் பால்கி. இதற்காக அமிதாப்பிடம் கதை சொல்லி ஓகேயும் வாங்கி விட்டார். இன்னொரு சிறப்பு செய்தியாக இந்தப்படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்க இருக்கிறார் தனுஷ்.
ஆனால் முதலில் அமிதாப்புடன் இணைந்து ஷாருக்கான் தான் நடிக்கிறார் என்ற தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகின. ஆனால் இப்போது திடீர்மாற்றமாக தனுஷ் நடிக்கிறார். ‘ராஞ்சனா’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் இந்தியில் நடிக்கும் அடுத்த படமே பாலிவுட் சூப்பர்ஸ்டாருடன் என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திதான்.
தனுஷுக்கு இது லைப் டைம் படமாக இருக்கும் என்கிறார்கள் கதையை கேள்விப்பட்டவர்கள். அந்த அளவுக்கு இதுவரை யாரும் நடிக்காத பவர்புல் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம் தனுஷ். இசை இளையராஜா, ஒளிப்பதிவு ஸ்ரீராம் என பால்கியின் ஆஸ்தான கூட்டணிதான் இந்தப்படத்திலும்.. மற்ற கேரக்டர்களுக்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரையில் முறையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.