‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’ படத்தின் க்ளாசிக் வெற்றியை தொடர்ந்து டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபு நடித்துவரும் அடுத்த படத்தின் பெயர் ‘1 நேனொக்கடினே’. இந்தப்படத்தில், மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார், கீர்த்தி சனான். சாயாஜி ஷிண்டே தான் வில்லன்.
ஆந்திர ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில், இந்தப்படத்தில் சரிவிகிதத்தில் மசாலா பொடி தூவியுள்ளார் இயக்குனர் சுகுமார். காதல், காமெடி, ஆக்ஷன் கலந்த கலவையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம், மகேஷ்பாபு தன் ரசிகர்களுக்கு படைக்கவுள்ள செமத்தியான விருந்தாக இருக்குமாம். வரும் சங்கராந்தி பண்டிகையை(பொங்கல்) முன்னிட்டு இந்தப்படம் ஆந்திராவில் வெளியாக இருக்கிறது.
அதே பண்டிகைக் கொண்டாட்டத்தில் நம் சூப்பர்ஸ்டாரின் கோச்சடையானும் அங்கே ரிலீஸாவதால் இப்போதே பாக்ஸ் ஆஃபீஸில் கடும் போட்டி நிலவுகிறது. மகேஷ்பாபுவின் படங்கள் எந்த சூழலில் ரிலீஸானாலும் பட்டையைக் கிளப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லைதான். ஆனால் கோச்சடையான் ரிலீஸாவதால் போட்டியை சமாளிக்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டது மகேஷ்பாபு தரப்பு.