ஹேப்பி பர்த்டே நயன்!

70

2005ல் ‘ஐயா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா ரசிகர்களை இன்றுவரை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்.. மலையாளத்தில் இருந்து வந்தாலும் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இன்றும் முன்னணி ஹீரோயின் இவர்தான். ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என வரிசையாக இப்போதும் அவர் நடிக்கும் படங்கள் வசூலை வாரிக்குவிக்கின்றன.

இடையில் இரண்டுமுறை இவரது வாழ்க்கையில் காதல் சூறாவாளி சுழன்று அடிக்க, அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிலிருந்து வெளியேறி இப்போது புடம்போட்ட தங்கமாக மின்னுகிறார் நயன்தாரா. தமிழ்சினிமாவில் நயன்தாரா மேற்கொள்ள வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது. அவரது வெற்றிப்பயணம் இனிதே தொடர behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.