சன்னி லியோனுடன் ஆட்டம் – ‘வடகறி’ ஜெய்க்கு வழங்கிய அதிர்ஷ்டம்

56

பாலிவுட்டில் தனது அதிரடி கவர்ச்சியால் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை சன்னி லியோன். குறிப்பாக ஐட்டம் டான்ஸுக்கு பெயர்போனவர். இவரை முதல் முதலாக தான் இயக்கிவரும் ‘வடகறி’ படத்துக்காக தமிழில் இறக்குமதி செய்கிறார் இயக்குனர் சரவணராஜன். இவர் வெங்கட்பிரபுவிடன் துணை இயக்குனராக வேலை பார்த்தவர்.

ஏற்கனவே ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

“இந்தப்படத்தில் ஜெய்க்கு கனவுப்பாடல் ஒன்று வருகிறது. அதற்காக யுவன் போட்ட ஒரு வெஸ்டர்ன் டைப் பாடலைக்கேட்டபோது அதற்கு சன்னி லியோனை ஆடவைத்தால் செம ஃபிட்டாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் இது வழக்கமான ஐட்டம் டான்ஸாக இருக்காது” என்கிறார் சரவணராஜன்.

இந்தப்பாடலின் கான்செப்ட் குறித்து சன்னி லியோனிடம் விளக்கியபோது அவர் ஆச்சர்யப்பட்டு போனாராம். காராணம் வழக்கமாக அவரை ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் ஐட்டம் டான்ஸ் ஆடத்தான் அழைப்பார்களாம். அப்படித்தான் ஆடியும் வருகிறார்.

ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சன்னி லியோனை பாடல்காட்சியில் வித்தியாசமாக காட்டப்போவதாக சொன்னது தான் அவரின் இந்த ஆச்சர்யத்துக்கு காரணமாம். அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? சன்னி லியோனுக்கு புடவைகட்டி ஆடவிடபோகிறார்களாம்.

வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப்பாடலை படமாக்க இருக்கிறார்கள். ஆனால் எந்த லொக்கேஷன் என்பது மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவிலை. அனேகமாக இயக்குனர் சரவணராஜன், இதற்காக சன்னி லியோனின் ரசிகர்களின் சாபத்திற்கு ஆளானாலும் ஆகலாம்.

Leave A Reply

Your email address will not be published.