‘ஜன்னல் ஓரம்’ – 29ஆம் தேதி ஒரு ‘ஜாலி ட்ரிப்’புக்கு தயராகுங்கள்

152

மலையாளத்தில் இருந்து அழகியல் நிறைந்த கதைகளை தமிழுக்கு கொண்டுவரும் நிகழ்வுகளை சில இயக்குனர்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஜன்னல் ஓரம்’ படம் ரசிகர்களின் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் ‘ஆர்டினரி’. மலைகிராமம் ஒன்றுக்கு சென்றுவரும் ஒரு பேருந்து ஒன்றையும் அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரின் அழகான, யதார்த்த வாழ்வியலையும் அற்புதமாக படமாக்கி இருந்தார்கள். இந்தப்படத்தைத்தான் தற்போது ‘ஜன்னல் ஓரம்’ படமாக இயக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன்.

இந்தப்படத்தில் பார்த்திபன், விமல், விதார்த் என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுனராக பார்த்திபனும் நடத்துனராக விமலும் நடித்திருக்கிறார்கள். மலையாளத்தில் இந்தப்படம் ஏற்படுத்திய அதே உணர்வை தமிழிலும் சுவை குறையாமல் கரு.பழனியப்பன் தந்திருப்பார் என்று தாராளமாக நம்பலாம்.

Leave A Reply

Your email address will not be published.