வெற்றிப்பயணத்தின் பத்தாவது ஆண்டில் நா.முத்துக்குமார்

120

வார்த்தைகளில் வசியமருந்தை குழைத்து இளைஞர்களை மயக்குவதில் கவிப்பேரரசுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்றால் அது நா.முத்துக்குமார் தான். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடரும் இவரது இசையுலகப்பயணம் பத்தாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.

இந்த 2013ல் அதிக படங்களில், அதிக பாடல்கள் எழுதியவர் என்கிற பெருமையை தட்டிச்செல்கிறார் நா.முத்துக்குமர். அதிலும் 34 படங்களில் 106 பாடல்கள் என்பது மிகப்பெரிய சாதனை தான். இதில் 10 படங்களில் அனைத்துப்பாடல்களையும் எழுதியிருப்பது இன்னொரு சாதனை.

‘தங்கமீன்கள்’ படத்தில் “ஆனந்தயாழை மீட்டுகிறாய்”, ‘தலைவா’வில் “வாங்கன்ன வணக்கங்கன்ன” “யார் இந்த சாலையோரம்”, ‘ராஜாராணி’யில் “சில்லென ஒரு மழைத்துளி”, ‘உதயம் என்.ஹெச்-4’ல் “யாரோ இவன்”, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வில் “ஒன்னப்பாத்த நேரம்” என இந்த வருடத்திய சூப்பர்ஹிட்டுகள் எல்லாமே நா.முத்துக்குமாரின் கைவண்ணம்தான்.

வாயைப் பிளக்கவைக்கும் இன்னொரு செய்தி தற்போது 97 படங்களுக்கு இவர் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். அதில் 31 படங்களுக்கு அனைத்து பாடல்களையும் இவர்தான் எழுதுகிறார். இதில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டுமல்லாது அறிமுக இயக்குனர்களின் படங்களும் அடக்கம்.

ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தருவது, இயக்குனர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பது, பிரபலங்ள், புதுமுகங்கள் என பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் சரிசமமான பங்களிப்பை தருவது இவைதான் நா.முத்துக்குமாரை எப்போதும் உயரத்திலேயே வைத்திருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.