பொதுமக்களுக்கு ஸ்ருதிஹாசன் எச்சரிக்கை..!

187

mainfolder-Actress Gallery-Sruthi Hasan -Sruthi Hasan 4 (33)
ரசிகர்களோ, பொதுமக்களோ யாரும் ஸ்ருதியை திட்டவும் இல்லை.. அதனால் அவர் கோபப்பட்டு எச்சரிக்கை செய்யவும் இல்லை.. வரும் நவ-1௦ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.. இதற்காக பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையில் ஸ்ருதிஹாசன் பண்ணியுள்ள எச்சரிக்கை தான் இது..

இந்த பண்டிகையை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடும் பொதுமக்களுக்கு, குறிப்பாக குட்டீஸ்களுக்கு எச்சரிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பாக விளம்பரப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தான் ஸ்ருதிஹாசன் தோன்றி பட்டாசு வெடிப்பது குறித்து எச்சரிக்கை செய்கிறார்.. இது தீபாவளி வரை தியேட்டர்கள், சேனல்கள் மற்றும் பொது இடங்களில் ஒளிபரப்பாக்க இருக்கிறது.

Comments are closed.