பாலசந்தர் பாணியை பின்பற்றிய டெல்லிகணேஷ்..!

182

IN01_6239f
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெல்லிகணேஷின் மகன் மாகாவும் இப்போது ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்.. படத்தின் பெயர் ‘என்னுள் ஆயிரம்’.. கதாநாயகியாக மலையாள நடிகையான மெரீனா மைக்கேல் என்பவர் நடிக்க, இந்தப்படத்தை தனது மகனுக்காக டெல்லி கனேஷே தயாரித்துள்ளார். இந்தப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார்..

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என மூன்று பேருக்கும் இதுதான் அறிமுகப்படம்.. ஆனாலும் இவர்கள் அனைவரும் பிரபலங்களின் சீடர்கள் தான். இயக்குனர் கிருஷ்ணகுமார் ஏ.எல்.விஜய்யின் சீடர்.. ஒளிப்பதிவாளர் அதிசயராஜ் நீரவ்ஷாவிடமும், எடிட்டர் சண்முகம் வேலுச்சாமி எடிட்டர் ஆண்டனியிடமும் தொழில் கற்றவர்கள் தான். தனது குருநாதர் பாலசந்தர் போல புதுமுகங்களை அறிமுகப்படுத்த விரும்பிய டெல்லிகணேஷின் ஆர்வம் தான் இதற்கு காரணமாம்.

Comments are closed.