கமல் இல்லத்தில் நடைபெற்ற ‘என்னுள் ஆயிரம்’ இசை வெளியீடு..!

163

Ennul Aayiram Audio Launch Still
உலக நாயகன் கமல் தனக்கென்று நட்பு நடிகர் வட்டாரம் ஒன்றை பல வருடங்களாக பேணி வருகிறார்.. அதில் முதன்மையாக இருந்தவர்கள் மறைந்த நடிகர்கள் நாகேஷ் மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோர்.. அவர்களுக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை தான் நாசர் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோருக்கும் கொடுத்து தனது படங்களின் பயணங்களில் தொடர்ந்து அவர்களை தவறாது இணைத்துக்கொண்டு வருகிறார்..

கமலுடனான டெல்லி கணேஷின் பயணம் ‘சிம்லா’ ஸ்பெஷல் படத்தில் ஆரம்பித்து கடந்த வருடம் வெளியான ‘பாபநாசம்’ வரை கிட்டத்தட்ட 30 வருடங்களாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.. மற்ற படங்களில் நடிப்பதை விட, கமல் படங்களில் நடிக்கும்போது டெல்லி கணேஷிற்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் தனி..

அந்த நட்பின் அடிப்படையில் தான் தனது மகன் மகா கதாநாயகனாக நடித்துள்ள ‘என்னுள் ஆயிரம்’ படத்தின் இசையை கமல் இல்லத்தில் வைத்து கமல் கைகளாலேயே வெளியிட வைத்துள்ளார் டெல்லி கணேஷ். இதுதான் தனது மகனுக்கு சிறந்த ஆசிர்வாதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் டெல்லி கணேஷ்.

இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிடுவதற்கு முன் மடிக்கணிணி மூல ட்ரெய்லரை பார்த்து ரசித்த கமல், ட்ரெய்லர் நன்றாக இருப்பதாகவும் படமும் இதுபோல இருந்தால் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘பெங்களூர் டேய்ஸ்’ புகழ் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.

Comments are closed.