‘விசாரணை’ படத்தை பாராட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி..!

198

visaranai screening
போலீஸாரின் விசாரணை எப்படி இருக்கும் என்பதை நிஜத்திற்கு பக்கத்தில் இருந்து சொன்ன படம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘விசாரணை’.. இந்தப்படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் தான் வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, சிறிய சலசலப்பு விமர்சனம் கூட எதிர்ப்பாக வெளியாகவில்லை. ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர்ஸ்டார்களே இந்தப்படத்தை பார்த்து தாங்கள் மிரண்டுவிட்டதாக பாராட்டியுள்ளார்கள்..

அப்படிப்பட்ட இந்தப்படத்திற்கு கிடைத்த இன்னொரு அங்கீகாரம் தான் உயர்நீதிமன்ற நீதிபதியான பி.என்.பிரகாஷ் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியது. அவர் மட்டுமல்ல, அவருடன் சேர்ந்து பயிற்சி நீதிபதிகளும் இந்தப்படத்தை பார்த்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனும் இந்த கதை உருவாக காரணமாக இருந்த ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரும் இந்த திரையிடலின்போது கலந்துகொண்டு இவர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார்கள்.

Comments are closed.