இமான் – விக்ரம் பிரபு ஆச்சர்ய கூட்டணி..!

194

immm
ஒரு இயக்குனரும் இசையமைப்பாளரும் தங்களது முதல் படத்தில் இருந்து பல படங்கள வரை தொடர் கூட்டணி அமைக்க முடியும் என்பதுதான் வரலாறு.. மணிரத்னம்-ரஹ்மான், ஷங்கர்-ரஹ்மான், கௌதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.எல்.விஜய்-ஜி.வி.பிரகாஷ் என இதற்கு பல உதாரணங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன. ஆனால் ஒரு அறிமுக ஹீரோவும் இசையமைப்பாளரும் தொடர்ந்து கூட்டணி அமைப்பது என்பது ஆச்சர்யமான ஒன்றுதான்..

ஐந்தாவது முறையாக இணைந்து அதை சாத்தியமாக்கி இருக்கிறது இமான் – விக்ரம் பிரபு கூட்டணி.. 2௦12ல் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமானதில் இருந்து இப்போதுவரை நடித்து ஆருபடங்கள் வெளியாகி இருக்கின்றன.. இன்னும் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் ஐந்து படங்களுக்கு இமான் தான் இசை என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். தொடர்ந்து ஹிட் கொடுத்தால் மட்டுமே இது சாத்தியம் என இமானும் ஆச்சர்யம் விலகாமல் கூறுகிறார்..

Comments are closed.