இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள். இந்தப்படத்தில் பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவனாக நடிக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
இயக்குனர் மணி நாகராஜும் ஜீ.வி.பிரகாஷும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் இருவரும் சந்தித்துகொண்டபோது பென்சில் படத்தின் கதையை ஜீ.வி.பிரகாஷிடம் சொல்ல அது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. உடனே படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார்கள். இந்தப்படத்துக்கு இசையமைப்பதும் ஜீ.வி.பிரகாஷ் தான். இவர்களுடன் ஒரு பலமான டெக்னிக்கல் டீமும் கைகோர்த்து களம் இறங்க இருக்கிறது.