புனே டூ சென்னை தல அஜித்தின் சமீபத்திய சாகஸம்

80

உயிரைப் பணயம் வைக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை செய்வதில் அஜித்தை மிஞ்ச ஆள் கிடையாது. பயங்கர பைக் பிரியரான தல சமீபத்தில் பி.எம்.டபிள்யூ ரக பைக்கை வாஙினார். கே 1300 எஸ் எண் கொண்ட அந்த பைக்கில் கடந்த மாதம் சென்னை டூ பொங்களூர் சென்றிருக்கிறார். சமீபத்தில் மும்பையில் ஆரம்பம் பட வேலையில் கலந்து கொண்டார். அங்கிருந்து புனே சென்று வீரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் போதே சென்னையிலிருந்த பைக்கை விமானம் மூலம் புனேக்கு வரவழைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் புனேயிலிருந்து நேற்று முன் தினம் காலை 7 மணிக்கு புனேயிலிருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தனர். 16 நேர பயணத்தில் சென்னை வந்தவர். போக்குவரத்தின் விழிப்புணர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே இந்த பைக் பயணம். “இந்த பயணம் ஒரு தியானம் போல் இருந்தது. தவம் மாதிரி இருந்தது டூ வீலரில் செல்பவர்கள்தான் விபத்தில் இறக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக எல்லோரும் ஹெல்மட் அணிந்து டூ வீலர் ஓட்டுங்கள்.” என்றும் அக்கறையோடு கூறினார் தல.

Leave A Reply

Your email address will not be published.