பாண்டிராஜ் டைரக்ஷனில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உங்களுக்கு தெரியும். இதில் மயிலா’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் நயன்தாரா. ‘வல்லவன்’ படத்திற்குப்பின் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இருந்தே இந்தப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார் நயன்தாரா. ஆனால் சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் நாளைமுதல் தான் படமாக்கப்படுகின்றன என்பதால் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து நாளை நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள்.
வல்லவன் படத்தை தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட பிரிவுக்குப்பின்னரும் கூட, ஓரிரு திரையுல விழாக்களிலும் நடிகர் சங்க உண்ணாவிரதங்கள், போராட்டங்களின் போதும் இருவரும் சந்தித்துக்கொண்டு உள்ளனர். ஏன், ஒருமுறை அருகருகே அமர்ந்தும் உள்ளனர். ஆனால் அதெல்லாம் மேடை நாகரிகம் கருதி ஏற்பட்ட நிகழ்வுகள் தான்.
ஆனால் நாளை சினிமாவுக்காக இருவரும் மீண்டும் சந்திக்க இருப்பதுதான் நமக்கு மட்டுமல்ல, பட யூனிட்டில் இருப்பவர்களுக்கும் கூட தூங்கமுடியாத அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவும் நயன்தாராவும் பழைய மனக்கசப்புகளை மறந்து பழைய கெமிஸ்ட்ரியை, இந்தப்படத்தில் மீண்டும் கொண்டு வருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.