யாழ் என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக்கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக்கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பினார்கள். யாழ்ப்பாணம் என்ற ஊருக்கு பெயர் வந்ததே இதனால் தான்.
தற்போது முழுக்க முழுக்க ஈழத்தமிழர் கதாபாத்திரங்களை மட்டும் வைத்து ‘யாழ்’ என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தப்பட்ட இந்த கதாபாத்திரங்களுக்கு இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
“யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.” என்கிறார் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த். இவர் ஒரு ஆஸ்திரேலியா வாழ் தமிழர். இந்தப்படத்தில் வினோத், டேனியல் பாலாஜி, சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, நீலிமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் பாடல்களும் வனமும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம். இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது.