இந்தப்பொங்கலுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தில் இருப்பவர் என்றால் அது காஜல் அகர்வால்தான். காரணம் ‘துப்பாக்கி’ படத்தை அடுத்து விஜய்யுடன் அவர் இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் ‘ஜில்லா’ படம் இந்தப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.
அதேபோல தெலுங்கில் ராம்சரண் நடித்து ஜனவரி-12ல் வெளியாக இருக்கும் ‘எவடு’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் காஜல். ஸ்ருதிஹாசன், எமி ஜாக்சன் ஆகியோர் தான் கதாநாயகிகள் என்றாலும் தானும் நடித்திருப்பதால் படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார் காஜல். அத்துடன் படங்களை தியேட்டரில் மட்டுமே போய் பார்க்கவேண்டும் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுத்துள்ளார் காஜல்.