சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறாரா.? சைலண்ட் மோடில் அஞ்சலி..!

184

சில பல பிரச்சனைகளுக்கு பின்னர் அஞ்சலி மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துவிட்டாலும், இன்னும் அழுத்தமாக கால் ஊன்றவில்லை என்றே தெரிகிறது.. காரணம் தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கரு’ மற்றும் விமலுடன் ‘மாப்பிள்ளை சிங்கம்’ என இரண்டு படங்களில் நடித்து வருபவர் அடுத்தடுத்து தமிழ்ப்படங்களில் கமிட்டாகவில்லை.

தவிர இப்போது தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்க திட்டமிட்டுள்ள அவரது 15௦ படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அஞ்சலியிடம் இதுபற்றி கேட்டால் இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்லமுடியாது என்று சைலண்ட் மோடிற்கு போய்விடுகிறாராம்.

Comments are closed.