கமலுடன் ஜோடி சேர்வதில் ஹாட்ரிக் அடித்த மனிஷா கொய்ராலா..!

185

இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் தோற்றார்கள் என்று சொல்லும் வகையில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கமல் காட்டிவரும் வேகம் பிரமிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட 199௦க்கு முன் பார்த்த கமலை இப்போது பார்க்கமுடிகிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை. உத்தம வில்லனை ரிலீஸ் செய்த கையோடு கமலின் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன,

இத்தனைக்கும் இன்னும் பாபநாசம், விஸ்வரூபம்-2 என கமலின் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இந்தநிலையில் கமலின் அடுத்த படம் ‘தூங்காவனம்’ என்றும் அவரது நீண்டநாள் உதவி இயக்குனர் ராஜேஷ் இயக்கம் இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

இப்போது அதில் ஒரு புதிய நபராக மனிஷா கொய்ராலாவும் நுழைய இருக்கிறார் என்கிறார்கள்.. கமலின் மனைவியாக ஒரு சிறிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் மனிஷா. ஏற்கனவே ‘இந்தியன்’ மற்றும் ‘ஆளவந்தான்’ என இரண்டு படங்களில் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.